Ticker

6/recent/ticker-posts

தகவல் மற்றும் முகாமைத்துவ மட்டங்கள்

தகவல் மற்றும் முகாமைத்துவ மட்டங்கள்

(Information and Management Levels)



நிறுவனம் ஒன்றின் கட்டமைப்பு
நிறுவனத்தின் முகாமைத்துவ மட்டங்கள் அதிகாரம் சார்ந்து மூன்று மட்டகளாக பிரிக்கப்படும்


·      இயங்கு நிலை மட்டம் - Operational Level (கிழ்மட்டம்)
  யார்: மேற்பார்வை/செயற்பாட்டு முகாமையாளர்கள்
  என்ன: அதிகளவில் பணியாளர்களை இயக்குவதாகும்
  ஏன்: 

  • பணியாளர்களுக்கு வேலைகள், பணிகளை நிர்ணயித்தல், பயிற்சிகளுக்கு   பொருப்பாயிருத்தல், ஊக்குவித்தல்
  • முலபொருட்கள், இயந்திரங்கள், கருவிகளை ஒழுங்குபடுத்தல்
  • நாளாந்த நடவடிக்கைகளில் பணியாளர்களை வழிகாட்டல் மற்றும் அறிவுறுத்துதல்
  • பணியாளர்களின் செயற்பாடுகள் பற்றிய அறிக்கை தயாரித்தல்.
  • நிறுவனத்தின் ஒழுகற்றை நிச்சயப்படுத்தல்
  • உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் தரத்திகும், எண்ணிக்கைக்கும் பொறுப்பாகவிருத்தல்
  • நிருவனத்தினுள் சிறந்த உறவை பேணல்
  • பணியாளர் பிரச்சனைகளை தீர்த்தல் மற்றும்  மேல் மட்ட ங்களிற்கு கொண்டு செல்லல்

·       முகாமைத்துவ மட்டம் - Management (நடு மட்டம்)  
யார்: கிளை முகாமையாளர்கள், பகுதி முகாமையாளர்கள்
என்ன: நிர்வாக ரீதியிலான வழிகாட்டுதல்களை ஏற்படுத்துதல் இயங்கு நிலை செயற்பாடுகளை கட்டுப்படுத்தலும், மேற்பார்வை செய்தலும்

ஏன்:          
  • உச்ச மட்ட முகமைதுவத்தின் திட்டங்களையும், வழிப்படுத்தாள்களையும் நிறைவேற்றுதல்
  • கீழ்மட்ட முகமைதுவத்துக்கு தொழில், பயிற்சி வழங்கள் மற்றும் ஊக்கம் அளித்தால்
  • இணைப்பாளராக தொழிற்படல்
  • நிறுவனத்தின் உப அலகுகளுக்கு  திட்டங்களை வகுத்தல்
  • உச்ச மட்டத்திலிருந்து கீழ்மட்டத்திட்கும் அதேபோல் கீழ் மட்டத்திலிருந்து உச்சமட்டத்திட்கு நிறுவனத்தின் தகவல்களை கடத்தல்
தந்திரோபாய மட்டம் - (Strategic level) (உச்சமட்டம்)  
யார்: இயக்குனர் சபை, தலைமை நிறைவேற்றுனர், முகமை இயக்குனர்கள்
என்ன: வியாபார நடவடிக்கைகளின் இறுதி அதிகார இலக்குகள், கோட்பாடுகளை சமாளித்தல். நேரங்களை திட்டமிடல், எதிர்கால திட்டங்களை வகுத்தல்

ஏன்:          
  • தந்திரோபாய திட்டங்கள், கொள்கைகளைத் தயாரித்தல்
  • சகலபகுதிகளையும் கட்டுப்படுதல் மற்றும் நடவடிக்கைகளை இணைப்பது
  • வெளியுலகதினருடனான உடன்படிக்கைகளை நிர்வகிக்கும் பொறுப்பு
  • நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு பொறுப்பாய் இருத்தல்
  • வழிப்படுத்தளையும், வழிகாட்டியும் அளித்தால்
  • நோக்கங்கள், நடைமுறைகளை, அறிவுறுத்தல்கள் வழங்கல்

தீர்மானமெடுத்தல் செய்முறை
  • பிரச்சனைகளைக் கூறுக
  • மாற்றங்களை அறிமுகப்படுத்துக
  • மாற்றங்களை மதிப்பிடுக
  • தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளல்
  • உங்கள் தீர்மானத்தை அமுலாக்கல்
தகவலின் முக்கியத்துவம்
சரியான தீர்மானத்தை உரிய நேரத்தில் எடுத்தல் ஒரு நிறுவனத்தின் வெற்றி தோல்விகளில் தங்கியுள்ளது. 

தீர்மானங்கள் பொதுவாக
தகவலின் பெறுமதி
தகவலினை பெறுபவரின் பொது அறிவு 
உரிய நேரத்தில் கிடைதல் தகவலில் தாக்கியுள்ளது.

தகவலின் பண்புகள்
  •              இற்றைப்படுத்தப்பட்டது
·         பூரணமானது
·         இலகுவாக கையாளக்கூடியது
·         கிரயத்தின் பெறுமதி
·         நம்பகத்தன்மை
·         உரிய நேரத்தில் கிடைத்தல்
·         தேவைகளுக்கு போதியதக் இருத்தல்
                     திட்டமான பெறுமானம் உடையது

தகவல் வகைகள்
மூலாதாரத்தின் மீதான அடிப்படையிலான

  • உள்ளக - உள்ளக மூலகங்களில் இருந்து சேகரிக்கும் தகவல்கள்
உ+ம்: நாளாந்த விற்பனை, வங்கிகளின் கணக்கு வைத்திருப்பவரின் கடன் விண்ணப்பத்தின் பொது தகவல் பெரும் முறை
  • வெளியக - வெளி மூலகங்களில் இருந்து சேகரிக்கும் தகவல்கள்
உ+ம்: புதிதாக தொடங்க உள்ள நிறுவனம் பெரும் தகவல்கள், வங்கிகளின் கணக்கு வைத்திராத ஒருவர் கடன் விண்ணப்பத்தின் பொது தகவல் பெரும் முறை

செயற்பாட்டுப் பரப்பின் அடிப்படையில்

  • விற்பனை மற்றும் சந்தைபடுதும் தகவல்கள் (Sales and Marketing)
  • உற்பத்தி தகவல்கள் (Production)
  • மனிதவள முகாமைத்துவ தகவல்கள் (Human Resource Management)
  • நிதி மற்றும் கணக்கீட்டு தகவல்கள் (Accounting & Finance)
முகாமைத்துவ மட்டங்களின் அடிப்படையில்

  • இயக்க தகவல் (Operational)
  • தந்திர தகவல் (Tactical)
  • தந்திரோபாய தகவல் (Strategic)

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code

Responsive Advertisement