தகவல் தொழில்நுட்பம் (Information System)
குறுக்கங்கள்;
IT – Information Technology
ITAA – Information technology Association of America

தகவல் தொழில்நுட்பவியல்
இன்றைய தகவல் யுகத்தில் தகவல்களைப் பெறுதல், சேமித்தல், கையாளுதல், தொடர்வுபடுத்தல், பிரயோகித்தல், முகாமைத்துவம் செய்தல் தகவல் தொழில் நுட்பமாகும்.

தரவு 
தெளிவான அர்த்தமற்ற மற்றும் ஒழுங்கற்ற விடயங்கள்
உ+ம்: சந்தை விற்பனை, கொள்வனவு, பணியாளர்,வாடிக்கையாளர் போன்றன

தகவல்
நிரல்படுதப்பட்ட (Process) தரவுகள் /கருத்துள்ளவாறு அமைக்கபட்ட தரவுகள்
உ+ம்: பகுப்பாய்வுகள், வரிசைப்படுதல்கள், தொகுப்புகள், கணினிப்படுத்தல்கள் போன்றன


முறைமை (System)
ஒரு குறித்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்கு ஒன்றுடனொன்று அகத்தே தொடர்புடைய பல மூலகங்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு ஒழுங்கு முறையாக அமைக்கப்பட்ட அமைப்பு.
உ+ம்: கல்வி முறைமை, வியாபார முறைமை, போக்குவரத்து முறைமை, தகவல் முறைமை போன்றன.

தகவல் முறைமை
ஒரு நிறுவனத்தின் இலக்கை அடைந்து கொள்வதற்கு தேவையான தகவல்களை ஒழுக்குபடுத்தும் முறைமை
உ+ம்: வங்கிகள், வைத்தியசாலைகள், பல்கலைகழகங்கள், தொழிற்சாலைகள்,
ATM, Hotel reservation System, Flight ticket reservation, Pay roll System

 தகவல் தொழில் நுட்பத்தின் செயல்பாடுகள்
·         தரவுகளை சேகரித்தல்
·         தரவு நிரல்களை தகவல்களாகுதல்
·         பயன்படுத்துவேருக்கு தகவல்களைப் பகிர்தல்
·         பின்னரான பயன்படுத்தளுக்கு தகவல்களைப் பயன்படுத்தல்

தகவல் தொழில்நுட்பத்தின் பிரதான பக்கங்கள்
·         கணினி தொழில் நுட்பம்
கணனி வன்பொருட்கள், மென்பொருள்களைப் பயன்படுத்தல்.
·         தொடர்பாடல் தொழில் நுட்பம்
தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி முறைமைகளுக்கு இடையிலான வலைபின்னல் மூலமான தொடர்பாடல்ள். உ+ம்: மின்னசல், உலாவிகள்
·         தகவல் முகாமைத்துவ தொழில் நுட்பம்
வாடிக்கையாளரின் உச்ச திருப்திக்கும், இணைந்த உற்பத்திக்கும், இலாப தன்மைக்கும், போட்டி தன்மைக்கும், உகந்தவாறு உற்பத்தியை உற்பத்தியை வடிவமைக்கவும் மற்றும் சேவைக்கும் தகவல் தொழில்நுட்பவியலைப் பயன்படுத்தல்.